IN

? खुशी, प्रसन्नता, स्वास्थ्य: 1. आंतरिक शांति। 2. दूसरों की मदद करने और समर्थन करने से संतुष्टि प्राप्त करना। संबंधों। 12R.tv❌✅ मैं आपको, स्वयं और अन्य लोगों को शुभकामना देता हूं कि अगले वर्ष के अंत में, हम में से प्रत्येक कह सके: “2022 मेरे जीवन का सबसे अच्छा वर्ष था ??”। Marcin Ellwart

प्रसन्नता

एक भावना

प्रसन्नता मानवों में पाई जाने वाली भावनाओं में सबसे सकारात्मक भावना है। इसके होने के विभिन्न कारण हो सकते हैं:

  • अपनी इच्छाओं की पूर्ति से संतुष्ट होना।
  • अपने दिन-रात के जीवन की गतिविधियों को अपनी इच्छाओं के अनुकूल पाना।
  • किसी अचानक लाभ से लाभांवित होना।
  • किसी जटिल समस्या का समाधान प्राप्त होना।
  • दिन के कार्य के बाद परिजनों या दोस्तों की संगत।
  • किसी परिजन या मित्र की कामियाबी।
  • किसी मनोरंजक कार्यक्रम को दिलचस्प या मनमोहक पाना।

इन कारणों के अलावा भी कुछ लोग स्वभाव से हमेशा प्रसन्न रहने की कोशिश करते हैं और जीवन की हर चुनौती को सकारात्मक रूप से स्वीकार करते हैं। हँसी और मुस्कुराहट खुशिया के लक्षण हैं। इसी को खुशी भी कहते हैं।

बुद्धिजीवियों की राय है कि कोई भी उन आतंरिक कारकों जैसे आत्मविश्वास, ध्यान, केंद्रित होना और संतुष्टि को आसानी जगा सकता है जो प्रसन्नता के लिए आवश्यक है। यही वह तत्व हैं जो कि संपूर्ण प्रसन्नता को जगा सकेगेंगे और यह मानव क्षमता और दूसरे मनुष्यों की मदद की भावना को भी जगा सकते हैं।[1]

Wikipedia.org:

https://hi.m.wikipedia.org/wiki/%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B8%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A8%E0%A4%A4%E0%A4%BE

मास्लो पिरामिड

मनोवैज्ञानिक सिद्धांत

मास्लो पिरामिड या मास्लो का आवश्यकता पदानुक्रम (hierarchy of needs) अब्राहम मास्लो द्वारा प्रतिपादित एक मनोवैज्ञानिक सिद्धान्त है जो उन्होने ‘ए थिअरी ऑफ ह्यूमन मोटिवेशन’ नामक अपने ग्रन्थ में १९५४ (1954)में प्रस्तुत किया था। मैसलो वह प्रथम मनोवैज्ञानिक है, जिसने “आत्मसिद्धि” प्रत्यय का अध्ययन किया। सिद्धान्त न केवल मनोविज्ञान के क्षेत्र में, बल्कि विज्ञापन के क्षेत्र में भी प्रसिद्ध हुआ। मनुष्य की आवश्यकताएं असीमित हैं अपने इस सिद्धान्त में मास्लो ने मानव आवश्यकताओं के कई स्तर बताये जो ये हैं- 1 व्यक्तिगत आवश्यकता:-A दैहिक आवश्यकता , B सुरक्षा आवश्यकता । 2 सामाजिक आवश्यकता:-A समबद्धता एवं स्नेह की आवश्यकता, B सम्मान की आवश्यकता । 3 बौद्धिक आवश्यकता:-A आत्मसिद्धि की आवश्यकता । (उपर्युक्त 1 को निम्न स्तरीय, व 2,3 को उच्च स्तरीय आवश्यकता भी कहते हैं।)

उन्‍होंने कहा कि मानव का अभिप्रेरण (मोटिवेशन) इसी क्रम में गति करता है। अर्थात मूलभूत आवश्यकताओं के पूरा होने पर ही उच्चस्तरीय आवश्यकताएँ जन्म लेतीं हैं।

मास्लो का सिद्धान्त उनकी १९५४ में रचित पुस्तक ‘मोटिवेशन एण्ड पर्सनालिटी’ में अपने पूर्ण रूप में सामने आया। यद्यपि यह आवश्यकताओं का यह पदानुक्रम अब भी समाजशास्त्रीय अनुसंधान, प्रबन्धकीय प्रशिक्षण आदि में बहुत महत्व रखता है, फिर भी बहुत सीमा तक इसका स्थान स्नेह सिद्धान्त (attachment theory) ने ले लिया है।

https://hi.m.wikipedia.org/wiki/%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B2%E0%A5%8B_%E0%A4%AA%E0%A4%BF%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%BF%E0%A4%A1

स्वास्थ्य

एक जीवित प्राणी के कार्यात्मक या चयापचय दक्षता का स्तर

विश्व स्वास्थ्य संगठन (W.H.O.) ने सन् 1948 में स्वास्थ्य या आरोग्य की निम्नलिखित परिभाषा दी गई है।

1) दैहिक, मानसिक और सामाजिक रूप से पूर्णतः स्वस्थ होना (समस्या-विहीन होना) ही स्वास्थ्य है।

या,

2) किसी व्यक्ति की मानसिक,शारीरिक और सामाजिक रुप से अच्छे होने की स्थिति को स्वास्थ्य कहते हैं।। [1]

स्वास्थ्य सिर्फ बीमारियों की अनुपस्थिति का नाम नहीं है। हमें सर्वांगीण स्वास्थ्य के बारे में जानकारी होना बहुत आवश्यक है। स्वास्थ्य का अर्थ विभिन्न लोगों के लिए अलग-अलग होता है। लेकिन अगर हम एक सार्वभौमिक दृष्टिकोण की बात करें तो अपने आपको स्वस्थ कहने का यह अर्थ होता है कि हम अपने जीवन में आनेवाली सभी सामाजिक, शारीरिक और भावनात्मक चुनौतियों का प्रबन्धन करने में सफलतापूर्वक सक्षम हों।

https://hi.m.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A5%E0%A5%8D%E0%A4%AF

स्वतन्त्रता

स्वतंत्रता आधुनिक काल का प्रमुख राजनैतिक दर्शन है। यह उस दशा का बोध कराती है जिसमें कोई राष्ट्र, देश या राज्य द्वारा अपनी इच्छा के अनुसार कार्य करने पर किसी दूसरे व्यक्ति/ समाज/ देश का किसी प्रकार का प्रतिबन्ध या मनाही नहीं होती। अर्थात स्वतंत्र देश/ राष्ट्र/ राज्य के सदस्य स्वशासन (सेल्फ-गवर्नमेन्ट) से शासित होते हैं। स्वतंत्रता का विलोम शब्द ‘परतंत्रता’ है। जरूरी नहीं कि ‘स्वतंत्रता’ का अर्थ ‘आजादी’ (freedom) भी हो।

https://hi.m.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%A4%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%A4%E0%A4%BE

हिन्दी

भारतीय भाषा हिन्दी विश्व की एक प्रमुख भाषा है एवं भारत की एक राजभाषा है। केन्द्रीय स्तर पर भारत में दूसरी आधिकारिक भाषा अंग्रेज़ी है। यह हिंदुस्तानी भाषा की एक मानकीकृत रूप है जिसमें संस्कृत के तत्सम तथा तद्भव शब्दों का प्रयोग अधिक है और अरबी-फ़ारसी शब्द कम हैं। हिंदी संवैधानिक रूप से भारत की राजभाषा और भारत की सबसे अधिक बोली और समझी जाने वाली भाषा है। हिन्दी भारत की राष्ट्रभाषा नहीं है क्योंकि भारत के संविधान में किसी भी भाषा को ऐसा दर्जा नहीं दिया गया है। एथनॉलोग (Ethnologue) के अनुसार हिन्दी विश्व की तीसरी सबसे अधिक बोली जाने वाली भाषा है।  विश्व आर्थिक मंच की गणना के अनुसार यह विश्व की दस शक्तिशाली भाषाओं में से एक है।

https://hi.m.wikipedia.org/wiki/हिन्दी

? மகிழ்ச்சி, இன்பம், ஆரோக்கியம்: 1. உள் அமைதி. 2. மற்றவர்களுக்கு உதவுவது மற்றும் ஆதரவாக இருப்பதன் மூலம் திருப்தி பெறுதல். உறவுகள். 12R.tv❌✅ நீங்களும் நானும் மற்றவர்களும் அடுத்த ஆண்டின் இறுதியில், “2022 என் வாழ்க்கையின் சிறந்த ஆண்டு ??” என்று சொல்லலாம் என்று நான் விரும்புகிறேன். Marcin Ellwart

இன்பம்

உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி

இன்பம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (happiness) என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. சிறப்பாக “இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்” என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர் “பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது” என்று சுட்டி காட்டுகிறார்.[1] தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

Wikipedia.org:

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow’s hierarchy of needs) என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) என்பவரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு முகாமைத்துவக் கற்கைகளில் மனித ஊக்கப்படுத்தல் (Motivation) சார் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. மாஸ்லோவின் இக் கோட்பாட்டில் மனிதன் என்பவன் முடிவில்லாத பலவித தேவைகளைக் கொண்டிருக்கும் வர்க்கமாவான். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியினை நாடி நிற்பான் எனவும், இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக காணப்படும் என்றும் கூறினார். இத்தகைய தேவைகளை 5 வகையாக பிரித்து தேவைகளையும் மக்களின் எண்ணிக்கையையும் தொடர்புபடுத்தி அவர் ஒரு பிரமிட் வடிவ விளக்கப்படத்தினை இக் கோட்பாட்டில் முன்வைத்தார்.

இவ் வரைபடத்தில் கீழ் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள் தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகள் பூர்த்தியானதும் அம் மனிதன் அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் உந்தப்படுவான் என மாஸ்லோ இக் கோட்பாட்டில் வரையறுத்துள்ளார்.

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

நலம்

மனநலம்

நலம் (Health) என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமின்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது[1]. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் (Ottawa Charter for Health Promotion) போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்க்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது[2].

வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின்றன. உலக வகைப்பாட்டு முறைகள் குடும்பம், செயல்பாடு, மாற்றுத்திறன், நலம் என்பவற்றுக்கான அனைத்துலக வகைப்பாடு, நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

நலம் சமூகத்தின் பல்வேறு கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. உயிரிய, சூழலியல், வாழ்விய, சமூக, அரச, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின், அவர் சார்ந்த சமூகத்தின் நலத்தைத் தீர்மானிக்கிறது. ஒருவர் உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத் தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவச் சேவைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனப் பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தைத் தீர்மானிக்கின்றன. அதனால் நலம் என்பதை நோய், நோயை குணப்படுத்தல் என்ற குறுகிய வரையறைக்குள் விளக்க முடியாது.

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

தமிழ்

உலகத் தொன்மையான மொழிகளில் முதன்மையானது.

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்